Showing posts with label கால பைரவர். Show all posts
Showing posts with label கால பைரவர். Show all posts

Tuesday, 22 December 2015

திருவெம்பாவை.MP3



 திருவெம்பாவை.MP3

திருவெம்பாவை என்பது மாணிக்கவாசகர் திருவண்ணாமலையை தரிசிக்கும்போது பாடப் பெற்றது. சிவனுக்குத் திருத்தொண்டு புரிவதையே வரமாகக் கேட்கிறது திருவெம்பாவை.

திருவெம்பாவைக்குச் சிறப்பாக விளங்குவது "எம்பாவாய்" என்னும் தொடர்மொழி. அதன் இருபது பாடல்களிலும் பாட்டின் இறுதியில் வருவதால் அதுவே இதற்குப் பெயராய் அமைந்தது.

சிவசக்தியின் அருட்செயலையும், நவசக்திகள் ஒன்றுசேர்ந்து சிவபெருமானைத் துதிப்பதும் திருவெம்பாவையின் தத்துவமாகும். மனோன்மணி, சர்வ பூததமணி பலப்பிரதமனி, பலவிகரணி, கலவிகரணி, காளி, ரெளத்திரி, சேட்டை, வாமை என்ற ஒன்பது சக்திகளின் ஏவலால் பிரபஞ்ச காரியம் நடைபெறும். இதனை உணர்ந்து நோற்பதே பாவை நோன்பாகும்.

பெண்கள் நோன்பு நோக்கச் செல்லும்போது தூங்குபவளை எழுப்பும் காட்சி திருவெம்பாவையில் வருகின்றது. ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெருஞ் சோதி, சிவலோகன், தில்லைச் சிற்றம்பலத்து ஈசன், அத்தன், ஆனந்தன் அமுதன், விண்ணுக்கு ஒரு மருந்து, வேத விழுப்பொருள், சிவன், முன்னைப் பழம், தீயாடும் கூத்தன் என்று பலவாறு இறைவனைக் குறித்துப் பாடி நீராடி சிவபெருமானிடம் அடியார்கள் வேண்டுவதை 'திருவெம்பாவை' விளக்குகிறது.

திருச்சிற்றம்பலம்


பாடல் 1

ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெரும் சோதியை
யாம் பாடக் கேட்டேயும் வாள் தடங்கண்
மாதே வளருதியோ வன்செவியோ நின்செவிதான்
மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலி போய்
வீதிவாய்க் கேட்டலுமே விம்மிவிம்மி மெய்ம்மறந்து
போதார் அமளியின் மேல் நின்றும் புரண்டு இங்ஙன்
ஏதேனும் ஆகான் கிடந்தாள் என்னே என்னே
ஈதே எந்தோழி பரிலோர் எம்பாவாய்

பொருள்: வாள் போன்ற நீண்ட கண்களையுடைய தோழியே! முதலும் முடிவும் 
இல்லாத ஒளிவெள்ளமாய் பிரகாசிக்கும் நம் சிவ 
பெருமான் குறித்து நாங்கள் பாடுவது உன் காதில் கேட்கவில்லையா? செவிடாகி 
விட்டாயோ? அந்த மகாதேவனின் சிலம்பணிந்த பாதங்களைச் சரணடைவது குறித்து 
நாங்கள் பாடியது கேட்டு, வீதியில் சென்ற ஒரு பெண் விம்மி விம்மி அழுதாள். 
பின்னர் தரையில் விழுந்து புரண்டு மூர்ச்சையானாள். ஆனால், நீ உறங்குகிறாயே!
 பெண்ணே! நீயும் சிவனைப் பாட எழுந்து வருவாயாக!



பாடல் 2

பாசம் பரஞ்சோதிக்கென்பாய் இராப்பகல் நாம்
பேசும் போதெப்போது இப்போதார் அமளிக்கே
நேசமும் வைத்தனையோ நேரிழையாய் நேரிழையீர்
சீசி இவையுஞ் சிலவோ விளையாடி
ஏசும் இடம் ஈதோ விண்ணோர்கள் ஏத்துதற்குக்
கூசும் மலர்ப்பாதம் தந்தருள வந்தருளும்
தேசன் சிவலோகன் தில்லைச் சிற்றம்பலத்துள்
ஈசனார்க்கு அன்பர் யாம் ஆரேலோர் எம்பாவாய்.
பொருள்:
 ""அருமையான அணிகலன்களை அணிந்த தோழியே! இராப்பகலாக எங்களுடன் அமர்ந்து 
பேசும் போது "ஜோதி வடிவான நம் அண்ணாமலையார் மீது நான் கொண்ட பாசம் 
அளவிடற்கரியது என்று வீரம் பேசினாய். ஆனால், இப்போது நீராட அழைத்தால் வர 
மறுத்து மலர் பஞ்சணையில் அயர்ந்து உறங்குகிறாய், என்கிறார்கள் தோழிகள். 
உறங்குபவள் எழுந்து, ""தோழியரே! சீச்சி! இது என்ன பேச்சு! ஏதோ கண்ணயர்ந்து 
விட்டேன் என்பதற்காக இப்படியா கேலி பேசுவது? என்றாள். அவளுக்கு பதிலளித்த 
தோழியர்,""கண்களை கூசச்செய்யும் பிரகாசமான திருவடிகளைக் கொண்ட சிவபெருமானை 
வழிபட தேவர்களே முயற்சிக்கிறார்கள். ஆனால், அவர்களால் முடியவில்லை. நமக்கோ,
 நம் வீட்டு முன்பே தரிசனம் தர வந்து கொண்டிருக்கிறான். அவன் சிவலோகத்தில் 
வாழ்பவன், திருச்சிற்றம்பலமாகிய சிதம்பரத்தில் நடனம் புரிபவன். நம்மைத் 
தேடி வருபவன் மீது நாம் எவ்வளவு தூரம் பாசம் வைக்க வேண்டும், நீயே புரிந்து
 கொள்வாயாக, என்றனர்.

பாடல் 3

முத்தன்ன வெண்நகையாய் முன்வந்து எதிர் எழுந்தன்
அத்தன் ஆனந்தன் அமுதனென்ற உள்ளுறித்
தித்திக்கப் பேசுவாய் வந்துன் கடை திறவாய்
பத்துடையீர் ஈசன் பழஅடியீர் பாங்குடையீர்
புத்தடியோம் புன்மை தீர்த்தாட் கொண்டாற் பொல்லாதே
எத்தோ நின் அன்புடமை எல்லோம் அறியோமே
சித்தம் அழகியார் பாடாரோ நம் சிவனை
இத்தனையும் வேண்டும் நமக்கேலோர் எம்பாவாய்
பொருள்: முத்துப்பற்கள் தெரிய சிரித்து எங்களை மயக்குபவளே! கடந்த ஆண்டுகளில்,
நாங்கள் வந்து எழுப்பும் முன்னதாக நீயே தயாராக இருப்பாய். சிவனே என் தலைவன் 
என்றும், இன்ப வடிவினன் என்றும், இனிமையானவன் என்றும் தித்திக்க தித்திக்க 
அவன் புகழ் பேசுவாய். ஆனால், இப்போது இவ்வளவு நேரம் எழுப்பியும் எழ மறுக்கிறாய். 
கதவைத் திற, என்கிறார்கள்.தூங்கிக் கொண்டிருந்த தோழி, ""ஏதோ தெரியாத்தனமாக 
தூங்கி விட்டேன். அதற்காக, என்னிடம் கடுமையாகப் பேச ÷வண்டுமா? இறைவனின் 
மேல் பற்றுடைய பழமையான அடியவர்கள் நீங்கள். உங்களைப் போல் எனக்கு இந்த 
விரதமிருந்ததில் அனுபவமில்லை. மேலும், பக்திக்கு நான் புதியவள். என் தவறைப்
 பெரிதுபடுத்துகிறீர்களே! என வருந்திச் சொல்கிறாள்.வந்த தோழியர் அவளிடம், 
""அப்படியில்லையடி! இறைவன் மீது நீ வைத்துள்ளது தூய்மையான அன்பென்பதும், 
தூய்மையான மனம் படைத்தவர்களாலேயே சிவபெருமானை பாட முடியும் என்பதும் 
எங்களுக்குத் தெரியும். நீ சீக்கிரம் எழ வேண்டும் என்பதாலேயே 
அவசரப்படுத்துகிறோம், என்றனர்.


பாடல் 4

ஒண்ணித் திலநகையாய் இன்னம் புலர்ந்தின்றோ
வண்ணக் கிளிமொழியார் எல்லாரும் வந்தாரோ
எண்ணிக் கொடுள்ளவா சொல்லுகோம் அவ்வளவும்
கண்ணைத் துயின்றவமே காலத்தைப் போக்காதே
விண்ணுக் கொருமருந்தை வேத விழுப்பொருளை
கண்ணுக்கினியானை பாடிக் கசிந்துள்ளம்
உண்ணெக்கு நின்றுருக யாம்மாட்டோம் நீயே வந்
தெண்ணிக் குறையில் துயலேலோர் எம்பாவாய்.

பொருள்:
 ""ஒளிசிந்தும் முத்துக்களைப் போன்ற பற்களுடன் சிரிக்கும் பெண்ணே! இன்னுமா 
உனக்குப் பொழுது விடியவில்லை? என்ற பெண்களிடம், உறங்கிய பெண், ""அதெல்லாம் 
இருக்கட்டும்! பச்சைக் கிளி போல் பேசும் இனிய சொற்களையுடைய எல்லா தோழிகளும்
 வந்துவிட்டார்களா? என்றாள். எழுப்ப வந்தவர் களோ, ""அடியே! உன்னை 
எழுப்புவதற்காக வந்த பெண்கள் எத்தனை பேர் என்பதை இனிமேல் தான் 
எண்ணவேண்டும். அதன்பின்பு எண் ணிக்கையைச் சொல்கிறோம். நாங்கள் ÷தவர்களின் 
மருந்தாகவும், வேதங்களின் பொருளாகவும் இருக்கும் சிவபெருமானைப் பாடி உள்ளம்
 உருகும் வேளை இது. இந்நேரத்தில் அவர்களை எண்ணிக் கொண்டிருக்க முடியுமா? 
ஆகவே, நீயே எழுந்து வந்து எத்தனை பேர் இருக்கிறோம் என்பதை எண்ணிப் பார். நீ
 எதிர்பார்க்கும் அளவுக்கு இங்கே பெண்கள் இல்லை என்றால், மீண்டும் போய் 
தூங்கு, என்று கேலி செய்தனர்.

பாடல் 5

மாலறியா நான்முகனும் காணா மலையினை நாம்
போலறிவோம் என்றுள்ள பொக்கங்களே பேசும்
பாலூறு தேன்வாய்ப் படிறீ கடைதிறவாய்
ஞாலமே விண்ணே பிறவே அறிவறியான்
கோலமும் நம்மை ஆட்கொண்டருளிக் கோதாட்டும்
சீலமும் பாடிச் சிவனே சிவனேயென்று
ஓலம் இடினும் உணராய் உணராய்காண்
ஏலக்குழலி பரிசேலோர் எம்பாவாய்
பொருள்: ""நறுமணத்திரவியம் பூசிய கூந்தலையும், பாலும் தேனும் ஊறும் 
இனிய உதடுகளைக் கொண்டவளுமான பெண்ணே! திருமால் வராகமாகவும், பிரம்மா அன்ன
மாகவும் உருவெடுத்துச் சென்றும் அவரது உச்சியையும், பாதங்களையும் காண முடியாத 
பெருமையை உடைய மலை வடிவானவர் நம் அண்ணாமலையார். ஆனால், அவரை நாம் 
அறிவோம் என நீ சாதாரணமாகப் பேசுகிறாய். நம்மால் மட்டுமல்ல... இவ்வுலகில் உள்ள 
மற்றவர்களாலும், அவ்வுலகிலுள்ள தேவர்களாலுமே அவனை புரிந்து கொள்ள முடியாது.
 அப்படிப்பட்ட பெருமைக்குரியவனை உணர்ச்சிப்பெருக்குடன்"சிவசிவ என்று 
ஓலமிட்டு அழைக்கிறோம். நீயோ, இதை  உணராமல் உறக்கத்தில் இருக்கிறாய். 
முதலில் கதவைத் திற என்று தோழியை எழுப்புகிறார்கள் திருவண்ணாமலை நகரப் 
பெண்கள்.


பாடல் 6

மானே நீ நென்னலை நாளை வந்து உங்களை
நானே எழுப்புவன் என்றலும் நாணாமே
போன திசை பகராய் இன்னம் புலர்ந்தின்றோ
வானே நிலனே பிறவே அறிவரியான்
தானே வந்து எம்மைத் தலையளித்து ஆட்கொண்டருளும்
வான்வார் கழல்பாடி வந்தோர்க்கு உன் வாய் திறவாய்
ஊனே உருகாய் உனக்கே உறும் எமக்கும்
ஏனோர்க்கும் தம் கோனைப் பாடேலோர் எம்பாவாய்

பொருள்: மான் போன்ற நடையை உடையவளே! நேற்று நீ எங்களிடம், 
"உங்களை நானே வந்து அதிகாலையில் எழுப்புவேன் என்றாய். ஆனால், நாங்கள் வந்து 
உன்னை எழுப்பும்படியாகி விட்டது. உன் சொல் போன திசை எங்கே? மேலும், சொன்னதைச் 
செய்யவில்லையே என்று கொஞ்சமாவது வெட்கப்பட்டாயா? உனக்கு இன்னும் 
விடியவில்லையா? வானவர்களும், பூமியிலுள்ளோரும், பிற உலகில் உள்ளவர் களும் 
அறிய முடியாத தன்மையை உடைய சிவபெருமானின் திருவடிகளைப் புகழ்ந்து பாடி வந்த
 எங்களுக்கு இன்னும் பதில் சொல்லாமல் இருக்கிறாய். அவனை நினைத்து உடலும் 
உள்ளமும் உருகாமல் இருப்பது உனக்கு மட்டுமே பொருந்தும். எனவே உடனே எழுந்து 
நாங்களும் மற்றையோரும் பயன்பெறும் விதத்தில் நம் தலைவனைப் புகழ்ந்து பாடு.

பாடல் 7

அன்னே யிவையுஞ் சிலவோ பல அமரர்
உன்னற் கரியான் ஒருவன் இருஞ்சீரான்
சின்னங்கள் கேட்பச் சிவனென்றே வாய் திறப்பாய்
தென்னாஎன் னாமுன்னந் தீசேர் மெழுகொப்பாய்
என்னானை என்னரையன் இன்னமுதென் றெல்லோமும்
சொன்னோங்கேள் வெவ்வேறாய் இன்னந் துயிலுதியோ
வன்னெஞ்சப் பேதையர் போல் வாளா கிடத்தியால்
என்னே துயிலின் பரிசேலோர் எம்பாவாய்.

பொருள்: தாயினும் மேலான பெண்ணே! உனது சிறப்புத்தன்மைகளில் 
இந்த தூக்கமும் ஒன்றோ?தேவர்களால் சிந்திப்பதற்கும் அரியவன் என்றும்,
மிகுந்த புகழுடையவன் என்றும், சிவனுக்குரிய திருநீறு, ருத்ராட்சம் முதலான 
சின்னங்களை அணிந்தவர்களைக் கண்டாலே "சிவசிவ என்பாயே! அப்படிப்பட்ட 
இறைவனை, நாங்கள் தென்னாடுடைய சிவனே 
போற்றி என சொல்லும்போது, தீயில்பட்ட மெழுகைப் போல் உருகி 
உணர்ச்சிவசப்படுவாயே! அந்தச்சிவன் எனக்குரியவன்! என் தலைவன்! இனிய அமுதம் 
போன்றவன் என்றெல்லாம் நாங்கள் புகழ்கிறோம்.இதையெல்லாம் கேட்டும், இன்று உன்
உறக்கத்துக்கு காரணம் என்ன? பெண்ணே! பெண்களின் நெஞ்சம் இறுகிப்போனதாக 
இருக்கக்கூடாது. ஆனால், நீயோ நாங்கள் இவ்வளவு தூரம் சொல்லியும் இன்னும் 
எழாமல் இருக்கிறாய். அந்த தூக்கத்தை நீ என்ன ஒருபரிசாகக் கருதுகிறாயா?

பாடல் 8

கோழிச் சிலம்பச் சிலம்பும் குருகு எங்கும்
ஏழில் இயம்ப இயம்பும் வெண்சங்கு எங்கும்
கேழில் பரஞ்சோதி கேழில் பரங்கருணை
கேழில் விழுப்பொருள்கள் பாடினோம் கேட்டிலையோ?
வாழி! ஈதென்ன உறக்கமோ வாய் திறவாய்?
ஆழியான் அன்புடைமை ஆமாறும் இவ்வாறோ?
ஊழி முதல்வனாய் நின்ற ஒருவனை
ஏழை பங்காளனையே பாடு ஏலோர் எம்பாவாய்.

பொருள்:
 தோழியை எழுப்ப வந்த பெண்கள், ""அன்புத்தோழியே! கோழி கூவிவிட்டது. பறவைகள் 
கீச்சிடுகின்றன. சரிகமபதநி என்னும் ஏழு ஸ்வரங்களுடன் வாத்தியங்கள் 
இசைக்கப்படுகின் றன. நம் அண்ணாமலையார் கோயிலில் வெண் சங்குகள் 
முழங்குகின்றன. இந்த இனிய வேளையில், உலக இருள் எப்படி நீங்குகிறதோ, அதுபோல்
பரஞ்ஜோதியாய் ஒளிவீசும் சிவனைப் பற்றி நாங்கள் பேசுகின்றோம். அவனது பெரும்
கருணையை எண்ணி வியக்கின்றோம். அவனது சிறப்புகளை பாடுகின்றோம். ஆனால், நீயோ
எதுவும் காதில் விழாமல் தூங்குகிறாய். இந்த உறக்கத்துக்கு சொந்தமானவளே! 
இன்னும் பேசமாட்டேன் என்கிறாயே! வாழ்க நீ! பாற்கடலில் பள்ளி கொண்டுள்ள 
திருமாலின் சிவபக்தியைப் பற்றி தெரியுமல்லவா? (அவர் வராக வடிவமெடுத்து 
சிவனின் திருவடி காணச்சென்றவர்). அப்படிப்பட்ட பெருமையுடைய உலகத்துக்கே 
தலைவனான சிவனை, ஏழைகளின் தோழனை பாடி மகிழ உடனே புறப்படு.



பாடல் 9

முன்னைப் பழம் பொருட்கும் முன்னைப் பழம்பொருளே
பின்னைப் புதுமைக்கும் பேர்த்தும் அப்பெற்றியனே
உன்னைப் பிரானாகப் பெற்ற உன் சீர் அடியோம்
உன்னடியார் தாள் பணிவோம் அங்கு அவர்க்கே பாங்காவோம்
அன்னவரே எம் கணவர் ஆவார்
அவர் உகந்து சொன்ன பரிசே தொழும்பாய் பணி செய்வோம்
இன்னவகையே எமக்கு எம் கோன் நல்குதியேல்
என்ன குறையும் இலோம் ஏலோர் எம்பாவாய்.
பொருள்:
கோடி வருடங்களுக்கும் முற்பட்ட பழமையான பொருள் இது என்று சொல்லப்படும் 
பொருட்களுக்கெல்லாம் பழமையானவனே! இன்னும் லட்சம் ஆண்டுகள் கழித்து 
இப்படித்தான் இருக்கும் இந்த உலகம்என்று கணிக்கப்படும் புதுமைக்கெல்லாம் 
புதுமையான சிவனே! உன்னை தலைவனாகக் கொண்ட நாங்கள், உனது அடியார்களுக்கு 
மட்டுமே பணிவோம். அவர்களுக்கே தொண்டு செய்வோம். உன் மீது பக்தி கொண்டவர்களே
எங்களுக்கு கணவராக வேண்டும். அவர்கள் இடும் கட்டளைகளை எங்களுக்கு கிடைத்த 
பரிசாகக் கருதி, மிகவும் கீழ்ப்படிதலுடன் பணி செய்வோம். இந்த பிரார்த்தனையை
மட்டும் நீ ஏற்றுக் கொண்டால், எங்களுக்கு எந்த குறையும் இல்லை என்ற 
நிலையைப் பெறுவோம்.


பாடல் 10

பாதாளம் ஏழினும் கீழ் சொற்கழிவு பாதமலர்
போதார் புனைமுடியும் எல்லாப் பொருள்முடிவே
பேதை ஒருபால் திருமேனி ஒன்றல்லன்
வேதமுதல் விண்ணோரும் மண்ணும் துதித்தாலும்
ஓதஉலவா ஒரு தோழன் தொண்டர் உளன்
கோதில் குலத்தான் தன் கோயிற்பிணாப் பிள்ளைகாள்
ஏதவனூர் ஏதவன்பேர் ஆருற்றார் ஆரயலார்
ஏதவனைப் பாடும் பரிசேலோர் எம்பாவாய்.

பொருள்:
 தீயபண்புகள் இல்லாத குலத்தில் உதித்தவர்களும், கோயில் திருப்பணியையே 
சொந்தமாக்கிக் கொண்டவர்களுமான பெண்களே! நம் தலைவனாகிய சிவபெருமானின் 
சொல்வதற்கரிய பெருமையுடைய திருப் பாதங்கள் ஏழுபாதாள லோகங்களையும் கடந்து 
கீழே இருக்கிறது. பல் வேறு மலர்களை அணியும் திருமுடியானது வான த்தின் 
எல்லைகளைக் கடந்து எல்லாப் பொருட்களுக்கும் எல்லையாக இருக்கிறது. சக்தியை 
மேனியில் ஒரு பாகமாகக் கொண்டதால் அவன் ஒருவனல்ல என்பது நிஜமாகிறது. 
வேதங்களும், விண்ணவரும், பூலோகத்தினரும் ஒன்று சேர்ந்து துதித்தாலும் அவன் 
புகழைப் பாடி முடிக்க முடியாது. யோகிகளுக்கும் ஞானிகளுக்கும் அவன் நண்பன். 
ஏராளமான பக்தர்களைப் பெற்றவன். அவனுக்கு ஊர் எது? அவனது பெயர் என்ன? யார் 
அவனது உறவினர்கள்? யார் அவனது பக்கத்து வீட்டுக்காரர்கள்? எந்தப் பொருளால் 
அவனைப் பாடி முடிக்க முடியும்? சொல்லத் தெரியவில்லையே!


 
 
 
பாடல் 11

மொய்யார் தடம் பொய்கை புக்கு முகேர் என்னக்
கையால் குடைந்து குடைந்து உன் கழல்பாடி
ஐயா வழியடியோம் வாழ்ந்தோம் காண்
ஆரழல் போல் செய்யா! வெண்ணீறு ஆடி! செல்வா!
சிறு மருங்குல் மையார் தடங்கண் மடந்தை மணவாளா!
ஐயா! நீ ஆட்கொண்டருளும் விளையாட்டில்
உய்வார்கள் உய்யும் வகையெல்லாம் உய்ந்தொழிந்தோம்
எய்யாமல் காப்பாய் எமையேலோர் எம்பாவாய்.
பொருள்: சிவபெருமானே! உன் அடியவர்களான நாங்கள் வண்டுகள் மொய்க்கும் மலர்களைக் கொண்ட குளத்தில் 
"முகேர் என சப்தம் எழுப்பி குதித்து, தண்ணீரைக் குடைந்து நீந்தியபடியே உன் 
திருவடிகளை எண்ணிப் பாடினோம். வழிவழியாக இந்த பாவை நோன்பை நிறைவேற்றி 
வருவதை நீ அறிவாய். சிவந்த நெருப்பைப் போன்றவனே! உடலெங்கும் திருநீறு 
அணிந்தவனே! செல்வத்தின் அதிபதியே! சிறிய இடையையும், மையிட்ட அழகிய 
கண்களையும் உடைய பார்வதிதேவியின் மணாளனே! ஐயனே! நீ இந்த உயிர்களை 
ஆட்கொண்டதும் அவை என்னவெல்லாம் நன்மையடையுமோ, அவை அனைத்தையும் 
அடைந்து விட்ட உணர்வு உன்னைப் பாடினாலே எங்களுக்கு கிடைத்து விடுகிறது! இந்த 
பேரின்பநிலை மறைந்து விடாமல் என்றும் நிலைத்திருக்க அருள்செய்வாயாக!


பாடல் 12

ஆர்த்த பிறவித்துயர் கெட நாம் ஆர்த்தாடும்
தீர்த்தன் நல் தில்லைச் சிற்றம்பலத்தே தீயாடும்
கூத்தன் இவ் வானும் குவலயமும் எல்லோமும்
காத்தும் படைத்தும் கரந்தும் விளையாடி
வார்த்தையும் பேசி வளைசிலம்ப வார் கலைகள்
ஆர்ப்ப அரவம் செய்ய அணிகுழல்மேல் வண்டார்ப்ப
பூத்திகழும் பொய்கை குடைந்துடையான் பொற்பாதம்
எத்தி இருஞ்சுனை நீராடேலோர் எம்பாவாய்

பொருள்: தோழியரே!
 இப்போது வாய்த்துள்ள பிறவியாகிய துன்பம் இனிமேலும் வராமல் தடுக்கும் 
கங்கையைத் தலையில் கொண்டவனும், சிறந்த திருத்தலமான சிதம்பரத்தில், கையில் 
அக்னியுடன் நடனமாடும் கலைஞனும், வானத்தையும், பூலோகத்தையும், பிற 
உலகங்களையும் காத்தும், படைத்தும், அழித்தும் விளையாடுபவனுமான தன்மைகளைக் 
கொண்டவர் நம் சிவபெருமான். அவரை, நம் கரங்களிலுள்ள வளையல்கள் 
ஒலியெழுப்பவும், இடுப்பிலுள்ள ஆபரணங்கள் பெருஒலி எழுப்பவும், பூக்களையுடைய 
பொய்கையில் நீந்தி மகிழ்ந்து, "சிவாயநம என்னும் மந்திரம் சொல்லி, அவனது 
பொற்பாதத்தை வணங்கி மகிழ்வோம்.



பாடல் 13

பைங்குவளைக் கார் மலரால் செங்கமலப் பைம்போதால்
அங்கங் குருகினத்தாற் பின்னும் அரவத்தால்
தங்கள் மலங்கழுவு வார்வந்து சார்தலினால்
எங்கள் பிராட்டியும் எங்கோனும் போன்றிசைந்த
பொங்கு மடுவிற் புகப்பாய்ந்து பாய்ந்து
நம் சங்கஞ் சிலம்பச் சிலம்பு கலர்ந்தார்ப்பக்
கொங்கைகள் பொங்கக் குடையும் புனல் பொங்கப்
பங்கயப் பூம்புனல் பாய்ந்தாடு ஏலோர் எம்பாவாய்.

பொருள்:
 கரிய நிற குவளை மலர்கள் குளத்தின்  நடுவிலே உள்ளன. அருகில் சிவந்த 
நிறத்தில் தாமரை மலர்கள் முளைத்துக் கிடக்கின்றன. நீர் காக்கைகள் நீரில் 
மிதக்கின்றன. இந்தக் குளத்தில் தங்கள் அழுக்கை களைய மக்கள் வருகிறார்கள். 
அவர்கள் "நமசிவாய என சொல்லி சப்தம் எழுப்புகிறார்கள். இந்தக்
காரணங்களால், இந்தக் குளம் எங்கள் சிவனையும், பார்வதியையும் போல் தோற்றமளிக்கிறது. 
தாமரை மலர்கள் நிறைந்த இந்த தெய்வீக குளத்தில், நம் சங்கு வளையல்கள் 
சலசலக்க, கால் சிலம்புகள் கலகலவென ஒலியெழுப்ப, மார்புகள் விம்ம, பாய்ந்து 
நடுப்பகுதிக்கு சென்று நீராடுவோம்.

பாடல் 14

காதார் குழையாடப் பைம்பூண் கலனாடக்
கோதை குழலாட வண்டின் குழாம் ஆட
சீதப்புனலாடிச் சிற்றம்பலம் பாடி
வேதப் பொருள்பாடி அப்பொருளா மாபாடி
சோதி திறம்பாடி சூழ்கொன்றைத் தார்பாடி
ஆதி திறம்பாடி அந்தமா மாபாடி
பேதித்து நம்மை வளர்ந்தெடுத்த பெய்வளை தன்
பாதத் திறம்பாடி ஆடேலோர் எம்பாவாய்.

பொருள்: ஆண்கள் அணிந்துள்ள காதணிகள் தண்ணீரில் ஆட, அவர்களின் தங்கநகைகள் 
ஆட, பெண் களின் கூந்தல் ஆட, அக்கூந்தலில் மலர்கள் அணிந்திருந்ததால் ஏற்பட்ட
வாசனை கருதி அதை முகர வண்டுகள் ஆட, குளிர்ந்த நீரில் ஆடுங்கள்.
அவ்வாறு நீராடும் போது சிற்றம் பலத்தில் நடனமிடும் சிவபெருமானின் புகழ் பாடுங்கள்.
வேதத்தின் பொருளையும், வேதத்தின் பொருளாக விளங்குகின்ற சிவனின் பெயரையும்
சொல்லி நீராடுங்கள். ஜோதி வடிவாய் திருவண்ணாமலையிலே காட்சி தரும் அந்த சிவனின் 
மாபெரும் விருத்தாத்தங்களையெல்லாம் சொல்லுங்கள். அவனது மார்பில் தவழும் 
கொன்றை மாலையின் மகிமை பற்றி பேசுங்கள். முதலும் முடிவும் இல்லாத அந்த 
இறைவனின் புகழைப் பாடுங்கள். பந்த பாசங்களில் இருந்து நம்மைப் பிரிக்கும் 
வளையல்கள் அணிந்த தாயுமானவாய் விளங் கும் அந்த சிவனின் பாதமலர்களைப் பாடி 
நீராடுங்கள்.

பாடல் 15

ஓரொரு கால் எம்பெருமான் என்றென்றே
நம்பெருமான் சீரொருகால் வாய் ஓவாள்
சித்தம் களிகூர நீரொருகால் ஓவா
நெடுந்தாரை கண்பனிப்ப பாரொருகால் வந்து
அணையாள் விண்ணோரைத் தான் பணியாள்
பேரரையற்கு இங்ஙனே பித்தொருவர் ஆமாறும்
ஆரொருவர் இவ்வண்ணம் ஆட்கொள்ளும் வித்தகர் தாள்
வார் உருவப் பூண்முலையீர் வாயார நாம்பாடி
ஏர் உருவப்பூம்புனல் பாய்ந்தாடலோர் எம்பாவாய்.
பொருள்: அழகிய மார்புகச்சையும், ஆபரணங்களும் அணிந்த பெண்களே! நம் தோழி "எம்பெருமானே 
என்று சிவனை ஒவ்வொரு நேரமும் அழைப்பாள். அவரது சிறப்புகளை நிறுத்தாமல் 
பேசுவாள். மனம் மகிழ இவ்வாறு அவள் அவரது சிறப்புகளைப் பேசுவதால் கண்களில் 
கண்ணீர் தாரை தாரையாக பெருகும். அந்த பக்திப் பரவச உலகில் இருந்து அவளால் 
இந்த பூமிக்கு மீண்டும் வரவே இயலாத நிலை ஏற்படும். அவள் விண்ணில் இருந்து 
எந்த தேவன் வந்தாலும் வணங்கமாட்டாள். சிவபெருமான் மட்டுமே தனது தெய்வம் 
என்ற நிலையில் பித்துப்பிடித்து நிற்பாள். அவளைப் போலவே நம்மையும் 
ஆட்கொள்ளக் காத்திருக்கும் வித்தகனான சிவனின் தாள் பணிந்து பாடுவோம். 
பூக்கள் நிறைந்த கலப்பை வடிவிலான குளத்தில் பாய்ந்து நீராடுவோம்.



பாடல் 16

முன்னிக்கடலை சுருக்கி எழுந்துடையாள்
என்னத் திகழ்ந்து எம்மை ஆளுடையாள்
மின்னிப் பொலிந்து எம்பிராட்டி திருவடிமேல்
பொன்னம் சிலம்பின் சிலம்பித் திருப்புருவம்
என்னச் சிலை குலவி நந்தம்மை ஆளுடையாள்
தன்னில் பிரிவிலா எம்கோமான் அன்பர்க்கு
முன்னியவள் நமக்கு முன்சுரக்கும் இன்னருளே
என்னப் பொழியாய் மழையேலோர் எம்பாவாய்

பொருள்: இந்தக் கடல் நீர் முழுவதையும் முன்னதாகவே குடித்து விட்டு மேலே சென்ற 
மேகங்கள் எங்கள் சிவனின் தேவியான பார்வதிதேவியைப் போல் கருத்திருக்கின்றன.
எங்களை ஆளும் அந்த ஈஸ்வரியின் சிற்றிடை போல் மின்னல் வெட்டுகிறது.
எங்கள் தலைவியான அவளது திருவடியில் அணிந்துள்ள பொற்சிலம்புகள் எழுப்பும் ஒலியைப் போல இடி 
முழங்குகிறது. அவளது புருவம் போல் வானவில் முளைக்கிறது. நம்மை 
ஆட்கொண்டவளும், எங்கள் இறைவனாகிய சிவனை விட்டு பிரியாதவளுமான அந்த தேவி, 
தன் கணவரை வணங்கும் பக்தர்களுக்கு சுரக்கின்ற அருளைப் போல. மழையே நீ 
விடாமல் பொழிவாயாக.

பாடல் 17

செங்கண் அவன்பால் திசைமுகன்பால் தேவர்கள்பால்
எங்கும் இலாதோர் இன்பம் நம்பாலதாக்
கொங்கு உண் கருங்குழலி நந்தம்மை கோதாட்டி
இங்கு நம் இல்லங்கள் தோறும் எழுந்தருளிச்
செங்கமலப் பொற்பாதம் தந்தருளும் சேவகனை
அங்கண் அரசை அடியோங்கட்கு ஆரமுதை
நங்கள் பெருமானைப் பாடி நலம் திகழ்ந்
பங்கயப் பூம்புனல் பாய்ந்தாடேலோர் எம்பாவாய்.

பொருள்: தேன்சிந்தும் மலர்களைச் சூடிய கருங்கூந்தலை உடைய பெண்களே! செந்தாமரைக் கண்ணனான 
நாராயணன், பிரம்மா, பிற தேவர்கள் யாரும் தராத இன்பத்தை அள்ளி வழங்க நம் 
தலைவனாகிய சிவபெருமான், இதோ! வீடுகள் தோறும் எழுந்தருளுகிறான். அவனது தாமரை
 போன்ற திருவடிகளால் நம்மை ஆட்கொள்ள சேவகன் போல் இறங்கி வருகிறான். அழகிய 
கண்களை உடையவனும், அடியவர்களுக்கு அமுதமானவனும், நமது தலைவனுமான அந்தச் 
சிவனை வணங்கி நலம் பல பெறும் பொருட்டு, தாமரை மலர்கள் மிதக்கும் இந்த 
பொய்கையில் பாய்ந்து நீராடி அவன் தரிசனம் காண தயாராவோம்.



பாடல் 18

அண்ணாமலையான் அடிக்கமலம் சென்றிறைஞ்சும்
விண்ணோர் முடியின் மணித்தொகை வீறற்றாற் போல்
கண்ணார் இரவி கதிர் வந்து கார் கரப்பத்
தண்ணார் ஒளி மழுங்கித் தாரகைகள் தாமகல
பெண்ணாகி ஆணாய் அலியாய் பிறங்கொளிசேர்
விண்ணாகி மண்ணாகி இத்தனையும் வேறாகி
கண்ணா ரமுதமாய் நின்றான் கழல்பாடி
பெண்ணே இப்பூம்புனல் பாய்ந்தாடலோர் எம்பாவாய்.

பொருள்: சூரியனின் ஒளிக்கீற்று வெளிப்பட்டதும் விண்ணிலுள்ள நட்சத்திரங்கள் எல்லாம்
எப்படி மறைந்தனவோ, அப்படி அண்ணாமலையாரின் திருவடியைப் பணிந்ததும்,
தேவர்களின் மணிமுடியிலுள்ள நவரத்தினங்கள் ஒளி இழந்தன. பெண்ணாகவும், ஆணாகவும், 
அலியாகவும் என முப்பிரிவாகவும் திகழும் அவர் வானமாகவும், பூமியாகவும், 
இவையல்லாத பிற உலகங்களாகவும் திகழ்கிறார். கண்ணுக்கு இனிய அமுதம் போல் 
தோன்றும் அவரது சிலம்பணிந்த திருவடிகளைப் புகழ்ந்து பாடி. பூக்கள் 
மிதக்கும் இந்தக் குளத்தில் பாய்ந்து நீராடுங்கள்.


பாடல் 19

உங்கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலமென்று
அங்கு அப்பழஞ் சொற் புதுக்குமெம் அச்சத்தால்
எங்கள் பெருமான் உனக்கொன்று உரைப்போம் கேள்
எம் கொங்கை நின் அன்பரல்லாதோர் தோள் சேரற்க
எம் கை உனக்கல்லாது எப்பணியும் செய்யற்க
கங்குல் பகலெங்கண் மற்றொன்றும் காணற்க
இங்கு இப்பரிசே எமக்கு எம்கோன் நல்குதியேல்
எங்கெழிலன் ஞாயிறு எமக்கேலோர் எம்பாவாய்.
பொருள்:
 "உன்னிடம் கொடுக்கப்படும் என் மகள் உனக்கு மட்டுமே சொந்தமானவள் என்று ஒரு 
தந்தை தன் மகளை ஒருவனிடம் திருமணம் செய்து கொடுக்கும்போது சொல்லும் பழமொழி 
இருக்கிறது. அதன் காரணமாக, எங்களைத் திருமணம் செய்வோர் எப்படி இருக்க 
வேண்டும் என்று உன் னிடம் கேட்கும் உரிமையுடன் விண்ணப்பிக்கிறோம். எங்களைத்
 தழுவுவோர் உன் பக்தர்களாக மட்டுமே இருக்க வேண்டும். எங்கள் கைகள் உனக்கு 
மட்டுமே பணி செய்வதற்கு அவர்கள்
அனுமதிப்பவர்களாய்  இருக்க வேண்டும். 
எங்கள் பார்வையில் உனக்கு பணி செய்பவர்கள் மட்டுமே தெரிய வேண்டும். பிற 
தீமைகள் எதுவும் பார்வையில் படவே கூடாது. இப்படி ஒரு பரிசை எம்பெருமானான நீ
 எங் களுக்கு தருவாயானால், சூரியன் எங்கே உதித் தால் எங்களுக்கென்ன?


பாடல் 20

போற்றி அருளுக நின் ஆதியாம் பாதமலர்
போற்றி அருளுக நின் அந்தமாம் செந்தளிர்கள்
போற்றி எல்லா உயிர்க்கும் தோற்றமாம் பொற்பாதம்
போற்றி எல்லா உயிர்க்கும் போகமாம் பூங்கழல்கள்
போற்றி எல்லா உயிர்க்கும் ஈறாம் இணையடிகள்
போற்றி மால் நான்முகனும் காணாத புண்டரீகம்
போற்றி யாம் உய்ய ஆட்கொண்டருளும் பொன்மலர்கள்
போற்றி யாம் மார்கழி நீராடேலோர் எம்பாவாய்.

பொருள்:
 சிவபெருமானே! எல்லாவற்றுக்கும் முதலாவதான உன் பாதமலர்களை வணங்குகிறோம். 
எல்லாவற்றுக்கும் முடிவாயுள்ள உன் மென்மையான திருவடிகளை பணிகின்றோம். எல்லா
 உயிர்களையும் படைக்கின்ற உன் பொற் பாதங்களை சரணடைகின்றோம். எல்லா 
உயிர்களுக்கும் வாழும் காலத்தில் இன்பமான வாழ்வு தரும் மலரடிகளை 
பிரார்த்திக்கிறோம். உயிர்களை அழித்து இறுதிக்காலத்தை தருகின்ற இணையற்ற 
காலடிகளைப் போற்றுகின்றோம். திருமாலாலும், பிரம்மாவாலும் காண முடியாத தாமரை
 பாதங்களைக் காண்பதில் பெருமிதமடைகின்றோம். எங்களுக்கு பிறப்பற்ற நிலை 
தரும் பொன் போன்ற திருவடிகளை பற்றுகின்றோம். இவ்வாறு உன்னோடு ஐக்கியமாகி, 
உன் நினைவுகளுடன் நீர்நிலைகளில் நீராடி மகிழ்கிறோம்.
 
திருச்சிற்றம்பலம் 

Saturday, 19 December 2015

பைரவர் வழிபாடு - கை மேல் பலன் - தன்னை வெளிபடுத்திய பைரவர்

என் குருநாதர் சாய் பாபா உபாசகர்( முக்காலமும் அறிந்தவர் ) சொன்ன பரிகார தகவல் இது 

 

 

பைரவரை வழிபடும் முறை :

நம்முடைய அனைத்து தேவைகளுக்கும் / பிரச்சனைகளுக்கும் ஒரே  தீர்வு 
பைரவருக்கு 21 சனி கிழமை பூசணி யில் விளக்கு போட வேண்டும் , கடைசி நாள் மட்டும் தயிர் சாதமும் , வடைமாலையையும் நிவேதனமாக படைங்க ன்னு சொன்னார் .


இந்த வழிபாடு ஏற்பட போகும் உயிர் இழப்பையே தடுக்க கூடிய சக்தி வாய்ந்தது 

(சுவாமிக்கு நிவேதனமாக படைக்கும் படையல் எதையும் நாமே வீட்டில் தயாரித்து கொடுக்க கூடாது , அதை அந்த கோவிலில் இருக்கும் அர்ச்சகர் / பூசாரி தான் தயாரிப்பார் நாம் அதற்க்கு ஆகும் செலவை மட்டுமே ஏற்க்க வேண்டும் )

இதை செய்ய முடியாதவர்கள் தினமும் சாதரணமான  விளக்கு போடலாம் , அதுவும் முடியாதவர்கள் வாரத்தில் ஒரு நாள் மட்டும் சாதரணமான விளக்கு 7 விளக்கு போடலாம் ( அந்த நாள் சனி கிழமையாக இருந்தால் மிகவும் உத்தமம், அப்படி தொடர்ந்து சனிக்கிழமையும் விளக்கு  போட முடியாமல்  தடை வந்தால் எதாவது ஒரு நாள்ல விளக்கு போட்டுக்கலாம் 

நான் ரொம்ப நாள் கழித்து என் குருநாதர் சாய்பாபா உபாசகர் கிட்ட என் பிரச்னையை பத்தி சொல்லி வருத்தப்பட்டேன் , அதற்க்கு அவர் வருத்தபடாதிங்க ,உங்க வீட்டுக்கு பக்கத்துல எதாவது பைரவர் கோவில் இருக்கா ன்னு கேட்டார் , இருக்கு சார் ன்னு சொன்னேன்  அந்த பைரவருக்கு தினமும் ஒரு விளக்கு போட்டுக்கிட்டு வாங்க ன்னு சொன்னார் , சார் ஏற்கனவே பூசணியில 21 சனி கிழமை விளக்கு போட்டு , கடைசி நாள் தயிர் சாதமும்  , வடை மாலையும்  பண்றப்போ தப்பா பண்ணிட்டேன் , அதனால ஏற்பட்ட பாதிப்பே இன்னும் நீங்க வில்லையே அதனால பைரவருக்கு விளக்கு போட பயமாயிருக்கு சார் ன்னு சொன்னேன் .
உங்களால அதை பண்ண முடியாதுன்னு தெரியும் அதனால தான் தினமும்  ஒரு சாதாரணமான விளக்கு போடுங்க போதும் ன்னு சொன்னார் , சார் இப்போ எத்தனை நாள் விளக்கு போடணும் ன்னு கேட்டேன் , ஒரு ரெண்டு மாசம் போடுங்களேன் ன்னு சொன்னார் 

திடீர்ன்னு  என்ன நினைச்சேன் தெரியலை , சார் நான் உயிரோட இருக்கறவரைக்கும் தினமும் பைரவருக்கு விளக்கு போடறேன் சார் ன்னு சொன்னேன் , ரொம்ப சந்தோசம் , கண்டிப்பா பண்ணுங்க எல்லா பிரச்சனைக்கும் கண்டிப்பா ஒரு தீர்வு இருக்கும் , நல்லாயிருபீங்க பைரவருக்கு விளக்கு போட ஆரம்பிங்க ன்னு சொன்னார் அவர்  
பாத்துக்குவார் சொன்னார் 

நான் குருநாதர்  கிட்ட கேட்ட அந்த நாள் பௌர்ணமி.  ஊருக்குள்ள இருக்கற இன்னொரு சிவன் கோவிலில் இருக்கற பைரவருக்கு பகல் முழுக்க எரிகிற மாதிரி விளக்கு போட  ஆரம்பிச்சேன் , அதே சமயம் வீட்டுக்கு பக்கத்துல இருக்கற பைரவர் கோவிலில் இரவு முழுக்க எரிகிற மாதிரி விளக்கு ஏற்றி வந்தேன் , எனக்கு HANS ( புகையிலை ) போடற பழக்கம், சிகரெட் குடிக்கற பழக்கம் இருந்தது , விளக்கு போட ஆரம்பிச்ச 8 ஆம் நாள்ல HANS ( புகையிலை ) போடறப்பெல்லாம் நெஞ்சை அடைக்கிற மாதிரி இருந்தது , உயிர் பயம் வந்தது ( பத்து வருட போதை பழக்கத்தை ) உடனே நிறுத்திட்டேன் , ரெண்டு நாள் கழிச்சி தேய்பிறை அஷ்டமி வந்தது , பூஜை முடிஞ்சதுக்கப்பறம் , குருநாதர் கிட்ட போன்  பண்ணி ரெண்டு கோவில்ல விளக்கு போட்டுக்கிட்டு இருக்கேனே அதனால ஏதும் பிரச்னை வருமா ன்னு கேட்டேன் 

அப்படியெல்லாம் ஒண்ணும்மில்லை , எல்லா பைரவரும் ஒன்னுதான் எல்லாருக்கும் ஒரே சக்திதான் அதனால எங்கே , எந்த பைரவருக்கு விளக்கு போட்டாலும் ஒரே மாதிரி பலன்தான் ன்னு சொல்லிட்டு, பைரவருக்கு விளக்கு போட ஆரம்பிச்சாலே இந்நேரம்  நன்மை ஏற்பட்டிருக்கனுமே ன்னு சொன்னார் ,  ( அதாவது பத்து வருச போதை பழக்கத்தை  கை விட்ட விஷத்தை மறைமுகமாக சொன்னார் )

அடுத்த தேய்பிறை அஷ்டமிக்கு பைரவருக்கு வடைமாலை சாற்றலாம் ன்னு கோவில் பூசாரிகிட்ட பணம் கட்டினேன் , அன்னைக்கின்னு ஒரு கெட்ட விஷயம் அஷ்டமி பூஜைக்கு போக  முடியலை 

அடுத்த அஷ்டமி பூஜைக்குகாவது பைரவருக்கு வடைமாலை சாற்றலாம்னு கோவில் பூசாரிகிட்ட பணம் கட்டி, குடும்பத்தோட பூஜையிலும் கலந்துகிட்டோம் , பைரவருக்கு சாற்றிய வடை மாலைல பாதி வடையை திருப்பி கொடுத்துட்டாங்க , எங்க அப்பா அம்மாவும் அதை வாங்கி சாமி ரூம் ல வச்சிட்டாங்க , 
இந்த அஷ்டமியோட சிகரெட் புடிக்கிற பழக்கத்தையும் விட்டிட்டேன் 


சரி குருநாதர் சொன்ன ரெண்டு மாசம் விளக்கு போடுங்க ன்னு சொன்னாரே  ன்னு அவர் கிட்ட பூஜை முடிஞ்சி போன் பண்ணப்போ 
தேவையில்லாம நீங்களே போய் சிக்கல் ல மாட்டிகிட்டிங்ன்களே ன்னு சொன்னார் , என்னக்கு  என்னன்னு புரியலை ஆனா பூஜையில தான் எதோ பிரச்னை ன்னு புரிஞ்சது , அடுத்த நாள் ஆஞ்சநேயர் கோவில்ல போய் பிரார்த்தனை பண்ணிவிட்டு நேர வீட்டுக்கு சாமி ரூமுக்கு வந்தப்போ தான் தெரிஞ்சது , பைரவருக்கு சாற்றிட்டு வாங்கிவந்த பாதி வடையில கிட்டத்தட்ட முக்கால்வாசி வடை பூசனம் பூத்த மாதிரி ஆயிடுச்சு , இத தான் குருநாதரும் சொல்லியிருப்பார் ன்னு எல்லாவடையும் அன்னைக்கு நைட்டுகுள்ள சாப்பிட்டு முடிச்சிட்டேன் 

(ஏற்கனவே ஒருமுறை 21 சனிகிழமை பூசணி ல விளக்கு போட்டு , கடைசி நாள் பைரவருக்கு வடைமாலையும் , தயிர் சாதமும் நைவேத்தியமா குருநாதர் பண்ண சொன்னப்போ, கடைசி நாள் வழிபாட்டை ரொம்ப தவறா செய்து உயிர் இழப்பை சந்தித்தேன் ,அதற்க்கப்பரம் சிவன் கோவிலுக்கே போக கூடாது , எந்த சூழ்நிலையிலும் பைரவரை பார்க்கவே கூடாது ன்னு 2 வருஷமா இருந்தேன் - திரும்பவும் அதே மாதிரி தவறு ஏற்படவும் , எனக்கு குருநாதர் மேலயும் , பைரவர் மேலயும் பயங்கரமான கோபம் , திரும்ப திரும்ப என்னை பைரவர் கிட்ட மாட்டிவிடுறாரே ன்னு )

மத்த கடவுள் வழிபாடு எப்படின்னு தெரியலை , பைரவர் வழிபாட்டுல பைரவருக்கு படைக்கிற எதையும் வீணாக்க கூடாது , அலட்சிய படுத்த கூடாது , காரணம் இந்த வழிபாடு ஏற்பட இருக்கும் உயிர் இழப்பை தடுக்க கூடிய சக்தி கொண்டது , அதனால இது சாதாரண விஷயம் இல்லை .

என் நண்பன் ஒருத்தன் கிட்ட வேதனையோட இந்த விசயத்த சொன்ன பொது ( அவனும் குருநாதரை சந்தித்து வந்தவன் , அவர் சொன்ன பரிகாரத்தை செய்து இன்றைக்கு அரசு வேலைல இருக்கான் ), எல்லாத்தையும் மறந்துவிடு , நேர அதே சிவன் கோவிலுக்கு போ , முன்னாடி இருக்கற விநாயகருக்கு ஒரு தேங்காயைய் உடைச்சி , ஒரு விளக்கு ஏத்தி , பைரவர்கிட்ட மனப்பூர்வமா மன்னிப்பு கேட்டு விளக்கு போட ஆரம்பி , எல்லாம் சரியாயிடும் ன்னு சொன்னான் , 

நேரா ஆஞ்சநேயர் கோவிலுக்கு போய் , ஒரு தேங்காய் உடைச்சி , ஒரு விளக்கு ஏத்தி , இந்த பிரச்சனையில இருந்து காப்பாத்துங்க, அதுவரைக்கும் தினமும் விளக்கு போட்டுட்டு வர்றேன் ன்னு பிரார்த்தனை பண்ணிட்டு , நரசிம்மர் கோவிலுக்கு போய் தாயார் கிட்ட வேண்டிகிட்டு , நரசிம்மரை 
தரிசிக்கும் பொது , நரசிம்மருக்கு தயிர் சாதத்தை படைச்சிகிட்டு இருந்தாங்க , நரசிம்மர் தரிசனம் முடிஞ்சு , வெளியே வந்தப்போ தயிர் சாத பிரசாத்தை முதல் ஆளா எனக்கு கொடுத்தாங்க . அங்கிருந்து நேர சிவன் கோவிலுக்கு போய் விநாயகருக்கு ஒரு தேங்காய் உடைச்சி , ஒரு விளக்கு ஏத்தி இனிமே கடவுள் வழிபாட்டுல எந்த பிரச்னையும் ஏற்படாம இருக்கணும்னு வேண்டிகிட்டு ஒரு விளக்கு ஏத்தி , பைரவர் கிட்ட மன்னிப்பு கேட்டு விளக்கு போட ஆரம்பிச்சேன் , விளக்கு போட்டு வெளியில வந்தப்போ அங்க ஒரு பெரிய பாத்திரத்துல பால் வச்சிக்கிட்டு என்னை பார்த்ததும் ஒரு டம்ளர் மொண்டு கொடுத்தாங்க , என்னென்னு கேட்டேன் , இன்னைக்கு பிரதோஷம் இது சிவனுக்கு அபிஷேகம் செய்த பால் குடிங்க ன்னு சொன்னாங்க , குடிச்சிட்டு சிவனை வெளியில இருந்து வணங்கிட்டு , என் டூவீலர் பக்கம் வந்தப்போ ஒரு பிச்சை எடுக்கற அம்மா என் கிட்ட வந்து , எப்பவும் துணைக்கு கூட ஒருத்தரை  வச்சிக்க உனக்கும் ஒரு குறையும் வராது ன்னு சொல்லிட்டு என்கிட்டே இருந்து பிச்சையை கூட கேக்காம போயிடுச்சு .

சரி இனிமேல் பைரவருக்கு வடைமாலை , தயிர் சாதம் ன்னு நைவேத்யம் பண்ற வேலையே வேண்டாம் , தினமும் காலையும் , மாலையும் விளக்கு மட்டும் ஏத்துவோம் ன்னு முடிவு பண்ணிட்டேன் 

இருந்தாலும் பயம் மட்டும் போகலை , அதே சிந்தனையாவே இருந்தேன் அடுத்த வாரம் BANK EXAM , ஏற்கனவே செய்துகிட்டு இருந்த வேலையும் போயி 5 மாசமா சும்மா இருந்தேன் , GOVERNMENT JOB தான் சரி ன்னு BANK EXAM க்கு தயார் பண்ணிக்கிட்டு இருந்தேன் , இந்த டென்சன் ல PREPARE பண்ற எண்ணமும் போச்சு , விரக்கதி மன நிலையிலேயே இருந்தேன் 

பரிச்சைக்கு முதல் நாள் பைரவர் வழிபாட்டு பிரச்சனையால மனசு சரியில்லன்னு தற்செயலா பாபா வழிபாட்டு மன்றத்துக்கு போனேன் ,பாபா வுக்கு ஆரத்தியும் பூஜையும் பண்ணிக்கிட்டு இருக்கோம் முடிஞ்சதுக்கபரம் போங்க ன்னு 1 மணி நேரம் உக்கார வச்சிட்டாங்க , இதுவரைக்கும் 2 நிமிசத்துக்கு மேல நான் அங்க இருந்ததே இல்லை , எதோ கடமைக்கு அடுத்த நாள் போய் பரிட்சை எழுதிட்டு வந்தேன் , பரிட்சை முடிஞ்சு வெளியே வர்றப்போ நண்பர் ஒருத்தர்போன் பண்ணி நீங்க ஊருக்கு வந்த வுடனே என்னை வந்து பாருங்க ன்னு சொன்னார் , எதோ முக்கியமான விஷயம் ன்னு நினைச்சி அவரை போய் பார்த்தேன் , அவர் ஒண்ணுமில்லைங்க  ஷீரடி சாய்பாபா விபூதி ரெண்டு பாக்கெட் கொடுக்கத்தான் கூப்ட்டேன் ன்னு  சொல்லி கொடுத்தார் , அவர் மாச மாசம் எனக்கு ஒரு பாக்கெட் விபூதி கொடுப்பார்


ரெண்டு மாசம் கழிச்சி exam ல pass ன்னு result வந்தது , ஏற்கனவே போன வருஷ பரிட்சையிலும் பாஸ் பண்ணினேன் , +2 ல மார்க் கம்மிங்கரதால எந்த interview போக முடியலை , இதுவும் அப்படித்தான் இருக்கும் இனிமே BANK  வேலையே வேண்டாம் ன்னு , நண்பனோட அறிவுரைப்படி TNPSC க்கு தயார் ஆனேன் , மறுபடியும் ரெண்டு மாசம் கழிச்சு 
திடீர்ன்னு interview call letter வந்தது , எனக்கு மிக பெரிய சந்தோசம் 
கிட்டத்தட்ட 9 வருஷ முயற்சி , INCOME TEX , AUDIT ன்னு 6 வருஷம் அந்த பரிட்சைகெல்லம் தயார் பண்ணி தோல்வி அடைஞ்சு , bank பரீட்சைக்கு  3 வருஷமா தயார் ஆகி, சரி இதுவும் நமக்கு கிடைக்காது , TNPSC யாவது முயற்சி செய்வோம் ன்னு போனப்போ இப்படி ஒரு letter வரவும் தலை கால் புரியலை , குருநாதருக்கு போன் போட்டு நன்றி சொன்னேன் , அடுத்து உங்களுக்கு மெடிக்கல் டெஸ்ட் , அப்புறம் வேலைதான் சொல்லிட்டு வாழ்த்தினார் , எனக்கு interview  வரைக்கும் போனதே பெரிய விஷயம் தான் .

interview க்கு போறதுக்கு முதல் நாள் நாமகிரி தாயார் கிட்ட வாங்குற முதல் மாச சம்பளத்துல தாயாருக்கு நகை செய்யறதா வேண்டிகிட்டேன் , அடுத்த நாள் interview  hall க்கு உள்ள போறதுக்கு முன்னாடி குருநாதர் கிட்ட போன் போட்டு ஆசிர்வாதம் வாங்கினேன் , interview ல 4 பேர் இருந்தாங்க அதுல 3 வதா இருந்தவர் என்னை கேட்ட முதல் கேள்வியே நாமகிரி தாயாரை பற்றிதான் கேட்டார் ராமனுஜம் பத்தி கொஞ்சம் சொல்லிட்டு தாயாருடைய பெருமைகளை அவர் கொஞ்ச நேரம் சொல்லிக்கிட்டு இருந்தார் , interview முடிஞ்சு வெளியே வந்து குருநாதருக்கு போன் பண்ணி , நான் 2 வருசத்துக்கு முன்னாடி என் சுயநினைவை இழந்து மாந்திரீகம் கத்துக்க இந்த  வழியா போனேன் , இப்போ வாழ்க்கைய தேடி இந்த வழியா போறேன் , இப்படி ஒரு முன்னேற்றத்துக்கு நீங்க தான் காரணம் , நீங்க இல்லன்னா நான் இறந்து போய் கூட 2 வருஷம் ஆகியிருக்கும்ன்னு  நன்றி சொன்னேன் .

அங்கிருந்து நேர பைரவர் கோவிலுக்கு வந்து விளக்கு போட்டு நன்றி சொல்லணும் ன்னு வந்து , பைரவருக்கு விளக்கு போட்டு தலையை நிமிர்ந்து பார்த்தா பக்கத்துல என் எதிரி நின்னுகிட்டு இருந்தான் ,  நான் மாந்திரீகம் ன்னு தேடி போக அவனும் ஒரு முக்கிய காரணமா இருந்தவன் , எனக்கு மறுபடியும் பைரவர் மேல கோபம் , இதுக்கு மேல என்ன விளக்குபோட்டு  என்ன ஆக போகுது , ஒரு வாரமா பைரவருக்கு விளக்கு போடலை , 

கோவில் பக்கத்துல ஒருத்தர் மன நிலை சரியில்லாம இருந்தார் , நாம ஏன் கோவில் , கடவுள் ன்னு திரும்ப திரும்ப துன்பத்த அனுபவிக்கனும் , பேசாம மனநிலை சரியில்லாம சாப்பாட்டுக்கு கூட வழியில்லாம இருக்கிற இவரோட பசி போக்கலாம் , விளக்கு போடற செலவுக்கு இவருக்கு சாப்பாட்டுக்கு செலவு பண்ணிட்டு போயிடலாம் , அப்படின்னு அவருக்கு காலைலயும் , இரவுலயும் சாப்பாடு வாங்கி கொடுக்க ஆரம்பிச்சேன் 

இந்த ஒரு வாரத்துல மனநிலை ஆஞ்சநேயர் மேல தீவிரமா மாறி போச்சு , தினமும் காலைல 10:30 டு 12  மணிக்கு ஆஞ்சநேயருக்கு அபிசேகம் நடக்கும் , அந்த அபிசேகத்துல கலந்துகிட்டேன் , தினமும் 1/2 லிட்டர் பால் வாங்கி கொடுப்பேன் , கடைசியா நம்ம மேல தீர்த்தம் தெளிப்பங்க , அப்பறம் கிளம்பிடுவேன் .

ஒரு வாரம் கழிச்சு திடீர்ன்னு ஒரு சிந்தனை , குருநாதர் பைரவர் தான் எனக்கு உயிர் வாழ்றதுக்கான ஒரே ஆதாரம் ங்கற மாதிரி சொல்லுவார் , இந்த மாதிரி சின்ன விசயத்துக்காக கோவிலுக்கு போகாம இருக்க கூடாது , ஒரு வேளை இதுவும் ஒரு தடையாக கூட இருக்கலாம் , நம்மளோட மோசமான கர்ம வினையா இருக்கலாம் ன்னு , விநாயகரை வணங்கி பைரவர் கிட்ட மன்னிப்பு கேட்டு மறுபடியும் விளக்கு போட ஆரம்பிச்சேன் , அதே சமயம் , அந்த மன நிலை சரியில்லாதவருக்கு சாப்பாடு வாங்கி கொடுக்கரதையும் நிறுத்தலை , ஆஞ்சநேயருக்கு பாலபிசேகம் பண்றதையும் நிறுத்தலை.

இதுக்கு நடுவுல interview மார்க் கும் வந்தது , cutoff ல எனக்கு ஒரு மார்க் பத்தலை , மறுபடியும் விரக்தி , கைக்கு எட்டுனது வாய்க்கு எட்டாத மாதிரி போச்சு , சரி நமக்கும் தோல்வி ஒன்னும் புதுசு இல்லையே  9 வருசமா தோத்துக்கிட்டு தானே இருக்கோம் ன்னு சமாதானமாயிட்டேன் , இவ்வளவு தூரம் வந்ததே பெருசு , அடுத்த முறை பாத்துக்கலாம் ன்னு விட்டுட்டேன் , 
ஆஞ்சநேயர் கிட்டயும்  , தாயார் கிட்ட மட்டும்தான் வேலைய பத்தி வேண்டியிருந்தேன் ,

ஒரு வாரம் ஆஞ்சநேயர் கோவிலுக்கு போகாம இருந்தேன் , அப்பறம் அது தப்புன்னு மனசுக்கு பட்டது , மறுபடியும் வணங்க ஆரம்பிச்சேன் 

ரெண்டு மாசம் கழிச்சு 2 வதா ஒரு cutoff மார்க் விட போறதா தகவல் வந்தது , point  புள்ளி 40 மார்க் குறைஞ்சது , என் மார்க் லிஸ்ட் ல வந்துடுச்சு ,

ஒரு நாள் bank ல வேலை கிடைச்சிருச்சி ன்னு sms வந்தது , என் அப்பாவ கூட்டிட்டு நான் முதல் முதலா விளக்கு போட்ட பைரவர் முன்னாடி சூடம் பொறுத்த சொல்லி எனக்கு பேங்க் வேலை கிடைச்சிருச்சு , என்னை ஆசிர்வாதம் பண்ணுங்க ன்னு சொல்லி கால்ல விழுந்தேன் 

குருநாதர் கிட்டயும் போன் பண்ணி விசயத்தை சொல்லி ஆசிர்வாதம் வாங்கினேன் , பாபா , பைரவர் , சிவன் , ஆஞ்சநேயர் , நாமகிரி தாயார் , நரசிம்மர் ன்னு எல்லா கடவுளுக்கும் மாலை வாங்கி போட்டுட்டு நன்றி சொன்னேன் ,


எனக்கு வேலை கிடைச்சது சாதரணமான விஷயம் இல்லை , 5 வருசத்துக்கு முன்னால ஒரு நண்பரோட மாமனார் கேரளாவில  ஒரு central government பேங்க் ல regional manager ஆ இருந்தார் நண்பர் எனக்காக  அவர் கிட்ட பேசி பணம் கொடுத்து வேலை வாங்க முடியுமா ன்னு கேட்டார் 4 லட்சம் வரைக்கும் செலவாகும் நான் வங்கி தரேன் ன்னு சொன்னார் , நான் என் அண்ணன் கிட்ட விசயத்தை சொன்ன போது , எந்த சூழ்நிலையிலும் குறுக்கு வழியில போகாதே , அது ஒரு நாளும் கவுரமான வெற்றியை தராது வேண்டாம் ன்னு சொல்லிட்டார் , சரி ன்னு விட்டுட்டேன் , இருந்தாலும் மனசு அறைகுறைய இருந்தது , என் அண்ணன் நீ சும்மாவே இருந்தாலும் பரவாயில்லை இந்த வழியில வேண்டவே வேண்டாம் சொல்லிட்டார் , அப்போ என் கிட்ட பணம் இருந்தது , 10 நாள் கழிச்சு தற்செயலா அந்த நண்பனை சந்திச்சப்போ அவங்க மாமனார் தவறிட்டதாக சொன்னார் , ஒரு வேளை பணம் கொடுத்து இருந்தால் அவ்வளோதான்,

ரெண்டாவதா நண்பன் அவனோட நண்பர் ஒருத்தர் கிட்ட  நான் பேங்க் exam க்கு தயார் ஆகிகிட்டு இருக்கேன் என்னை பத்தி அறிமுகம் செய்து வைத்தான் , அவர் தன் தங்கைக்கு எதாவது செய்யணும் , என் தங்கச்சிக்கு சொல்லி கொடுத்து பாஸ் பண்ண வைக்க முடியுமா ன்னு கேட்டார் , நண்பனும் உன்னால பாஸ் பண்ண வைக்க முடிந்தால் ,அதையே காரணமா வச்சு நாம இங்கேயே COACHING CLASS ஆரம்பிக்கலாம் ன்னு சொன்னான் , நானும் 9 வருஷமா சுயமா கத்துகிட்ட அனுபவம் இருக்கரதால  சரின்னு சொல்லி அந்த பொண்ணுக்கு exam க்கு apply  பண்ணிட்டு சொல்லி கொடுக்க தயார் ஆனேன் , ஒரு மாசம் கழிச்சு நண்பனுக்கு வேற ஒரு விஷயமா பேசிட்டு , அப்படியே சொல்லிகொடுக்கரத பத்தி பேசறதுக்காக  அவனுக்கு போன் பண்ணேன் , நான் இங்கே ஊருலதான் இருக்கேன்ன்னு சொன்னான் , என்ன விஷயம் ன்னு  கேட்டேன் , அந்த நண்பர் ஒரு விபத்துல தவறிட்டார் ன்னு அதுக்க்காகதான் ஊருக்கே வந்தேன் ன்னு சொன்னான்

இப்படி ஒரு வேலைக்காவும் , வருமானத்துக்காகவும் மிக பெரிய போராட்டத்தை சந்திச்சிட்டு வந்த சூழ்நிலையில தான் எனக்கு இப்படி ஒரு வேலை கிடைச்சது 

சென்னை ல ஒரு ஞாயிற்று கிழமை நாள்ல certificate verification அடுத்த நாள்ல இருந்து ஒரு வாரம் training , training date ல இருந்து duty joining ன்னு சொல்லி 3 appointment order copy வந்தது , அப்படி ஒரு letter வீட்டுக்கு வந்ததாக என் போன் பண்ணி சொன்னார் ,

APPOINTMENT ORDER வீட்டுக்கு வந்த அந்த  நாள்  சரியா 365 நாளுக்கு முன்னாடி குருநாதர் கிட்ட போன் பண்ணி கேட்டப்போ தினமும் பைரவருக்கு விளக்கு போட்டு கிட்டு வாங்க , நன்மை நடக்கும் ன்னு சொன்னாரே அந்த நாள் தான் , நேரமும் கூட  அரை மணி நேரம் தான் வித்தியாசம் , யோசித்து பார்த்தப்போ இந்த விஷயம் தூக்கிவாரி போட்ட மாதிரி இருந்தது , 

பைரவருக்கு நான் விளக்கு போட ஆரம்பிச்ச 365 வது நாள் சரியா ஒரு வருஷம் கழிச்சு எனக்கு  APPOINTMENT ORDER வீட்டுக்கு வருது 

certificate verification க்காக நான் அலைஞ்சது medical டெஸ்ட் க்காக  தான் , மெடிக்கல் டெஸ்ட் க்காக அலைஞ்ச போதுதான் 7 மாசத்துக்கு முன்னாடியே 
இனமேஅடுத்து  மெடிக்கல் டெஸ்ட் அப்புறம் வேலைதான் ன்னு குருநாதர் சொன்னது நினைவுக்கு வந்தது 

பைரவர் கோவில் பூசாரிகிட்ட 9 நாளுக்கும் தேவையான விளக்கும் எண்ணையும் வாங்கி கொடுத்திட்டு, என் நண்பன் ஒருத்தன் கிட்ட 9 நாளுக்கு ஆஞ்சநேயருக்கு விளக்கு போட சொல்லி பணம் கொடுத்துட்டு ,   ஒரு வாரம் சென்னை ல trainning , certificate verification க்கு முதல் நாள் சனிக்கிழமையே சென்னை ல திருவான்மியூர் ல இருக்கற நண்பன் ரூமுக்கு போயிட்டேன் , அன்னைக்கே  ஈஞ்சம்பாக்கத்துல இருக்கற பாபா கோவிலுக்கு போய்ட்டு  வந்தேன் , (நான் போன பாபா கோவில் அது ஒண்ணுதான் )

(3 வருசத்துக்கு முன்னாடி நான் குருநாதரை சந்தித்தப்போ அவர் நீங்க இங்க இருக்காதிங்க வெளியூர் எங்காவது போங்க ன்னு சொன்னார் , எனக்கு 21 சனி கிழமை வரைக்கும் எங்க போறதுன்னு தெரியாம , சென்னை ல திருவான்மியூர் ல இருக்கற நண்பன் ரூமுக்கு போய் பேங்க் exam க்கு தயார் ஆகலாம் ன்னு தங்கியிருந்தேன் , அப்போ 21 சனிக்கிழமையும்திருவான்மியூர் ல இருக்கற அருள் மிகு மருந்தீஸ்வரர் கோவில்ல இருக்கற காலபைரவருக்கு விளக்கு போட்டுட்டு வந்தேன் )

மறுபடியும் அருள் மிகு மருந்தீஸ்வரர் கோவிலுக்கு போவேன்னு கற்பனை கூட பண்ணலை
training க்காக காலை ல கிளம்பி போனபோது turning ல கோவிலை பார்த்தபோது ஆட்டோவை நிறுத்தி இறங்கிட்டேன் , வாழ்க்கைல முதல் முறைய வேலைக்கு போறோம் , 3 வருசத்துக்கு முன்னாடி இந்த கோவில்ல தான் விளக்கு போட்டுட்டு  4 மாசம் bank exam ல கேக்கற 200 கேள்விக்கும் எனக்கு தெரியாதது ன்னு எதுவுமே இருக்க கூடாது ன்னு வெறிபுடிச்ச மாதிரி பேங்க் exam க்கு தயார் ஆனேன் , இப்போ பாஸ் ஆனா பரிட்சைக்கும் கூட அப்போ படிச்ச படிப்பு தான் காரணம் , அப்படி பட்ட கடவுளை வணங்காம போறது சரியில்லை ன்னு , அந்த கோவிலுக்கு போய் பைரவருக்கு விளக்கு போட்டு போலாம் ன்னு உள்ளே போனேன் , சிவ பெருமானுக்கு அப்போதான் அபிஷேகம் ஆரம்பம் செய்திருப்பாங்க போல , சிவபெருமானுக்கு பாலபிசேகம் நடைபெற்று கொண்டிருந்தது , அப்போ ஒரு  6,  7 பேரு ரொம்ப ராகமா ஒரு சிவன் பாடலை பாடிகிட்டு இருந்தாங்க , கேட்டு சொக்கி போயிட்டேன் , என் போன் record பண்ற வசதி இல்லாததல கேக்கற பாக்கியம் மட்டும்தான் கிடைச்சது அந்த கோவில் ரொம்ப பழமை வாய்ந்தது , அகத்தியருக்கு வன்னி மரத்தடியில் காட்சி தந்து , அனைத்து வியாதிகளுக்கு உண்டான மருந்து , மூலிகை ரகசியங்களை அகத்தியருக்கு சிவபெருமான் போதித்த தலம் இது , இங்க பாலபிசேகம் முடிஞ்ச உடனே கிழே விழும் பாலை ஏந்தி குடிக்க கூட்டம் கூடும் , இங்க கொடுக்கும் விபூதியும் , சிவனுக்கு அபிசேகம் செய்த எல்லாமே மருந்துதான் 

எப்பவும் காலைல 7 to 8 குள்ள சிவனுக்கு  அபிஷேகம் நடக்கும் , 

ஒரு வாரமும் இந்த அபிசேகத்தை பார்த்திட்டு, பைரவரை வணங்கிட்டு தான் training க்கு போனேன் கடைசியா 6 வது நாள் சனிகிழமை training , அன்னைக்குதான் training முடிஞ்சு எந்த ஊர்ல posting தகவல் சொல்லுவாங்க , ரொம்ப ஆர்வமா கோவிலுக்கு போனேன் ,கோவிலுக்கு போனா , சிவனுக்கு அபிசேகத்தை முன்னாடியே முடிசிட்டாங்க , வழக்கமா வர்ற எல்லாருமே புலம்பிகிட்டு இருந்தாங்க 

கொஞ்ச நேரத்துல கோவில் அர்ச்சகர் , அங்க பைரவருக்கு அபிஷேகம் ஆரம்பிக்க போகுது , எல்லாரும் அங்க போங்க ன்னு சொன்னார் ,இப்படி நடக்கும் ன்னு நான் கொஞ்சம் கூட எதிர்பாக்கலை , 

பைரவருக்கு அபிஷேகம் நடந்து முடிந்தது , எல்லாரும் போய்ட்டாங்க , பைரவர் முன்னாடி மண்டியிட்டு தலைவணங்கி , தலை தூக்கி பார்த்தப்போ பைரவர் தலையில இருந்து ஒரே ஒரு வில்வ  இலை இறங்கி அவர் பாதத்துல விழுந்தது , அவர் தலைல வேற எந்த பூவோ இலையோ இல்லை ,
எனக்கு சந்தோசத்துல அழுகைதான் வந்தது , பக்கத்துக்கு ஊர் லயே posting போட்டாங்க 
அடுத்தநாள் சிவனுக்கு அபிசேகத்தை பார்த்திட்டு , பாபா வையும் வணங்கிட்டு 
ஊருக்கு வந்துட்டேன் ,

ஊருக்கு வந்து நான்  தினமும் காலைலயும் , இரவுலயும் சாப்பாடு வாங்கி கொடுத்துகிட்டு இருந்த அந்த மன நிலை சரியில்லாதவரை காணோம் , என்ன விசாரிச்சப்போ அவரை மன நல காப்பகத்துக்கு கூட்டிட்டு போயட்டன்கலம் , 

எனக்கு அன்னதானம் ன்னா என்ன , அதோட வலிமையை என்னன்னு புரிஞ்சது . இதுவும் பைரவர் உத்தரவு ன்னும்  புரிஞ்சது 
அபிசேகத்துல கலந்துகிறது எல்லாமே பைரவர் உத்தரவு தான் ன்னு புரிஞ்சது 

அடுத்தநாள் duty ல join பண்ணேன் , 15 நாள் கழிச்சு ஒரு நாள் சாப்பிட்ட உணவு ஏதோ ஒதுக்கலை , நைட்டு  வாந்தி எடுத்து உடம்பை என்னமோ பண்ணிடுச்சி , சிவனை நினைச்சு வேண்டிகிட்டேன் , அடுத்த நாள் வேலை முடிச்சிட்டு கிளம்பும்பொது , பக்கத்துல இருக்கற ரொம்ப பழமை வாய்ந்த சிவன் கோவிலுக்கு போய் சிவனை வணங்கினேன் , அன்னைக்கு வியாழன் கிழமை ஒவ்வொரு வியாழக் கிழமையும் அங்க இருக்கற குருபகவானுக்கு ஹோமம் செய்து அபிஷேகம் செய்வார்களாம் , நான் உள்ள போன 10 நிமிஷம் கழிச்சு ஹோமம் ஆரம்பம் ஆனது . எனக்கு ஏன் அந்த ஊருக்கு posting கிடைச்சதுக்கான  காரணமும் தெரிஞ்சது 


அடுத்த  2 நாள் கழிச்சி ஒரு  சனி கிழமை அன்னைக்கு எனக்கு முதல் மாசம் சம்பளம் வந்தது , அன்னைக்கி தேய்பிறை அஷ்டமி , நான் கலந்துக்கற  13 வது  தேய்பிறை அஷ்டமி. மொத்த சம்பளத்தையும் வாங்கிட்டு நேர ஊருக்கு வந்து பரீட்சைக்கு முதல் நாள் உக்கார்ந்திருந்த பாபா வழிபாட்டு மன்றத்துக்கு போய் மொத்த பணத்தையும் பாபா பாதத்துல அரை மணி நேரம் வச்சிட்டு அப்படியே  பாபா பாததில் விழுந்து வணங்கினேன் , வீட்டுக்கு போயிட்டு அப்பா அம்மா கிட்ட கொடுத்துட்டு அவங்க காலில் விழுந்து வணங்கினேன்,

5 மணிக்கு பைரவருக்கு தேய்பிறை அஷ்டமி பூஜைக்கு கலந்துக்க போனப்போ அவர் கிட்ட முதல் மாச சம்பளம் ன்னு அந்த பணத்தை பைரவர் பாதத்துல வச்சி கொடுக்க சொன்னேன் ,அன்னைக்கு பைரவருக்கான பூஜை செலவு 500 ரூபாயை எடுத்து அவர் கிட்ட கொடுத்தேன் , நான் சம்பாரிச்சு செய்த முதல் செலவு அது , ஆஞ்சநேயர் , நாமகிரி தாயார் , நரசிம்மர் ன்னு எல்லாரையும் வணங்கிட்டு , முதல் மாச சம்பளத்தோட அடையாளமா பாபா வோட சிலையை வாங்கினேன் , குருநாதருக்கு போன் பண்ணி சொன்னேன் வாழ்த்தினார்  .


  
                                  
இந்த பிரபஞ்சத்தையே படைத்தது , காத்து வரும் சக்தி 
                              நான் தினமும் வணக்கும் என் பைரவர் 


                        _______________________________________________ 

என்னுடைய 3 வருட பைரவர் வழிபாட்டோட அனுபவம் 



நான் உணர்ந்த பைரவ வழிபாட்டோட  ரகசியம்

டவுன் ல ஒரு சிவன் கோவில் இருக்கு , அங்க பைரவர் இருக்கார் , வீட்டுக்கு பக்கத்துல ஒரு அம்மன் கோவில் இருக்கு அங்கயும் பைரவருக்கு ஒரு  தனி சன்னதி ( ஒரு சின்ன அறை )

3 வருஷமா டவுன் ல இருக்கற பைரவருக்கு விளக்கு ஏத்திகிட்டு வர்றேன்

வருசத்துக்கு ஒரு முறை அல்லது ரெண்டு தடவை ன்னு  ஒரு மாசத்துக்கு தொடர்ச்சியா வீட்டுக்கு பக்கத்துல இருக்கற பைரவருக்கு சன்னதிக்கு உள்ளே  விளக்கு ஏத்துவேன் , அப்புறம் எதாவது தடை வரும் மறுபடியும் 7 / 8 மாசத்துக்கு அந்த கோவிலுக்கு போக மாட்டேன் மறுபடியும் திடீர்ன்னு தோணும் அந்த கோவிலுக்கு போய் ஒரு மாசத்துக்கு மட்டும் விளக்கு ஏத்துவேன் அப்புறம் எதாவது தடை வரும்  அப்படியே விட்ருவேன் 

இப்படியே தொடர்ந்தப்போ தான் ஒரு விசயத்தை உணர ஆரம்பிச்சேன் 

நான் வீட்டுக்கு பக்கத்துக்கு ல தனி சன்னதி ல இருக்கற பைரவருக்கு உள்ளே  விளக்கு ஏத்துகிற காலத்துல மட்டும்தான் வாழ்க்கைல மிக பெரிய  முனேற்றமும் , நல்ல ( positive ) எண்னங்களும் ,சிந்தனைகளும், செயல்களிலும்  பெரிய அளவில நல்ல  மாற்றம் ஏற்பட்டது , இதெல்லாம் ரொம்ப ரொம்ப குறுகிய காலத்துல ஏற்பட்டது

டவுன் ல இருக்கற கோவிலுக்கு 3 வருசமா தினமும் காலைலயும் , இரவு நடை சாத்திரதுக்கு முன்னாடியும் போய் விளக்கு ஏத்துவேன் ,இந்த 3 வருசத்துல பெருசா  எந்த தடையும் வந்தது இல்லை

ஆனா வீட்டுக்கு பக்கத்துல இருக்கற பைரவர் சன்னதி க்கு தொடர்ந்து ஒரு மாசத்துக்கு மேல போக முடியலை எதாவது தடை வந்துகிட்டே இருக்கு

ரெண்டு பைரவருக்கும் ஒரே ஒரு வித்தியாசம்


டவுன் ல இருக்கற பைரவர் சிலை சுவற்றிலே அப்படியே ஒட்டி வச்ச மாதிரி வெட்ட வெளியில் இருப்பார் 





வீட்டுக்கு பக்கத்துல இருக்கற பைரவர் தனி  சன்னதியில் (அறையில்) இருப்பார் இங்க நான் உள்ளே எத்தற விளக்கு வெளிச்சமும் அதன் பிரகாசமும் இந்த பைரவரின் அறைக்குள் மட்டுமே இருக்கும் 

இதுதான்  ரகசியமாக இருக்கும் ன்னு எனக்கு மனசுக்கு  பட்டது 

அதனால்தான் இந்த விசயத்தை எழுதிகிறேன் 3 வருஷமா விளக்கு போட்டதுல கிடைச்ச மிக பெரிய அனுபவம் அல்லது தெய்வ ரகசியம் இந்த விஷயம் 

இந்த ரகசியத்தை முழுமையா அனுபவிச்சதால இந்த பதிவை 3 வருஷம் கழிச்சு திரும்பவும் எழுதுகிறேன் 

இப்படி ஒரு கோவில் எல்லா ஊர்லயும் கண்டிப்பா இருக்கும் , குறைந்த பட்சம் ஒரு 3 கிலோமீட்டர் தூரத்துக்குள்ளவே இப்படி ஒரு கோவில் இருக்கும் .
ஒரு முக்கியமான விஷயம் உள்ளே விளக்கு ஏற்றும் போது கண்டிப்பாக எண்ணை படும் எவ்வளவுதான் கவனாமாக செய்தாலும் எண்ணை ஆகும் , அதை சுத்தம் செய்யற வேலை அந்த கோவில் அர்ச்சகர் / பூசாரியின் வேலை 
நாம எண்ணையை சிந்தி அதை அவங்க சுத்தம் பண்றது அவங்களுக்கு கண்டிப்பா சலிப்பாகதான் இருக்கும் , அதனால மாசம் ஒரு முறை 50 ரூபா சுத்தம் செய்ய கொடுக்கலாம் ங்கறது என்னோடுடைய கருத்து .

இந்த காரணத்தினால் எனக்கு ஒரு  1 மாசம் விளக்கு ஏத்த முடியாம போய்டுச்சு
இந்த முறையில் விளக்கு ஏற்றி பாருங்கள் கண்டிப்பாக உங்களால் பைரவரை நேரில் பார்க்க முடியாத குறை ஒன்றை தவிர அவரை முழுமையாக உங்களால் உணர முடியும் குறுகிய காலத்திற் குள்ளாகவே . அப்படி நீங்கள் உணர்ந்தால் உங்கள நண்பர்களுக்கு. தெரிந்தவர்களுக்கு / யாரெல்லாம் மீள முடியாத துன்பத்தில் இருக்கிறார்களோ அவர்களுக்கு இந்த ரகசியத்தை சொல்லி அவர்கள் வாழ்விலும் விளக்கு ஏற்ற வேண்டுகிறேன்

விஷயம் இவ்வளவுதான் தினமும் வெளியில் இருக்கும் விநாயகருக்கு ஒரு சின்ன விளக்கு ஏற்றி விட்டு பின் உள்ளே இருக்கும் பைரவருக்கு ஒரு விளக்கு ஏற்றனும்.
முயற்சி செய்து பாருங்கள் பைரவரின் அற்புதத்தை உணரலாம்  இது என் அனுபவம் 
                __________________________________________________

குருநாதர் சாய் பாபா உபாசகர் ( திரு விஸ்வநாதன் ) அவர்களை சந்திக்க விருப்பம் உள்ளவர்கள் 
saibabatrichy@gmail.com 
 ங்கற ஈமெயில் id க்கு தொடர்பு கொள்ளவும்
Related Posts Plugin for WordPress, Blogger...